சென்னை: சென்னையில் இன்று காலை நிலவரப்படி கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், சென்னையில் புதன்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,28,169 ஆக உள்ளது.
இவர்களில் 2,22,039 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,077 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 277 பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் இதுவரை கரோனாவுக்கு 505 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் 24,365 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..