தமிழ்நாடு

சங்ககிரி சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில்  மார்கழி மாத நிறைவு நாள் சிறப்பு பூஜை 

13th Jan 2021 09:17 AM

ADVERTISEMENT

சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் நிகழாண்டு மார்கழி மாத பஜனை நிறைவு நாள் சிறப்பு பூஜைகள் கோயில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் அருள்மிகு சோமேஸ்வரர் பக்தர்கள் குழுவினர் சார்பில் கடந்த டிசம்பர் 16ம் தேதி (மார்கழி மாதம் 1ம் நாள்) தொடங்கி ஜனவரி 13ம் தேதி வரை (மார்கழி 29ம் நாள்) வரை தினசரி  அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை சுவாமிகளுக்கு  சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி மற்றும் சிவபுராண பாடல்களை பாடி சுவாமிகளை பக்தர்கள் வழிப்பட்டனர். அதனையடுத்து மார்கழி மாத பஜனை நிறைவு நாளையொட்டி கோயில் முழுவதும் செவ்வாய்க்கிழமை   தூய்மைப்படுத்தப்பட்டு கோயில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணங்கள், வாழை மரங்கள் கட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. அதனையடுத்து புதன்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  சிறப்பு பூஜைகளையொட்டி உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டன.  இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

Tags : சங்ககிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT