தமிழ்நாடு

திருச்சியில் 20 திரையரங்குகளில் 'மாஸ்டர்'

13th Jan 2021 12:44 PM

ADVERTISEMENT

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 20 திரையரங்குகளில் மாஸ்டர் படம் புதன்கிழமை வெளியானது. விஜய் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகி பல்வேறு தடைகளைக் கடந்து பொங்கல் திருநாளையொட்டி மாஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில், திருச்சி மணப்பாறை, லால்குடி, திருவானைக்கா, திருவெறும்பூர், முசிறி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4.30 மணிக்கு ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது.

தாரை, தப்பட்டை, மேள தாளங்கள் முழங்க ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்து, விஜய் கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. மேலும், திருச்சி திரையரங்கில் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை, மளிகை பொருள்களை மத்தியப் பகுதி தொண்டரணி சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன. அதிகாலை 4.30 மணிக்கு ரசிர்கள் காட்சியைத் தொடர்ந்து, அனைத்து திரையரங்குகளிலும் காலை 8.30, 11.15, 2.30, 6.15, 9.30 எனதொடர்ந்து 5 காட்சிகள் திரையிடப்படுகின்றன. ரசிகர்கள் காட்சியின்போது இருக்கைகள் 100 சதவீதம் நிறைந்திருந்தன. பலரும் இருக்கைகள் கிடைக்காமல் நின்றபடியே படம் பார்த்தனர். கரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.

Tags : திருச்சி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT