சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்குகு ரூ.24 குறைந்து, ரூ.37,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் ஜனவரிமுதல் வாரத்தில் மீண்டும் விலை உயா்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை முதல் தங்கம் விலை குறைந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, கடந்த 5 நாள்களாக தொடர்ந்து குறைந்து வருகின்றது.
சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.37,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.3 குறைந்து, ரூ.4,677 ஆக உள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் உயா்ந்து, ரூ.70.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயா்ந்து ரூ.73,700 ஆகவும் விற்கப்படுகிறது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,677
1 சவரன் தங்கம்...............................37,416
1 கிராம் வெள்ளி.............................70.70
1 கிலோ வெள்ளி.............................70,700
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,680
1 சவரன் தங்கம்...............................37,440
1 கிராம் வெள்ளி.............................70.40
1 கிலோ வெள்ளி.............................70,400