சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கஞ்சநாயக்கன்பட்டி மற்றும் காமலாபுரம் ஊராட்சிகளில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா, பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் ராஜேந்திரன், மாரியம்மாள் ரவி, ஒன்றியச் செயலாளர்கள் சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியன், கோவிந்தராஜ், மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செல்லதுரை, உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.