தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 

13th Jan 2021 02:55 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு  நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

ADVERTISEMENT

அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர, திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும். 

14.01.21, 15.01.21: தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையும் நிலவும். 

16.01.21: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

17.01.21: தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு 

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக, கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை 28, சேத்தியாத்தோப்பு 21, புவனகிரி 20, திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் 19, மணிமுத்தாறு 17, சிதம்பரம் 16, பெலந்தூரை 14, சீர்காழி 12, திருவிடைமருதூர் 11, அம்பாசமுத்திரம் 10, மயிலாடுதுறை, லப்பைக்குடிக்காடு, குடவாசல், கும்பகோணம் தலா 9, செந்துறை, நாகப்பட்டினம், தேக்கடி, நன்னிலம் தலா 8, காட்டுமன்னார் கோயில், ஜெயங்கொண்டம், சேரன்மாதேவி தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

Tags : Rain heavy rain கனமழை IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT