தமிழ்நாடு

காலமானாா் முன்னாள் அமைச்சா் ப.வெ.தாமோதரன்

13th Jan 2021 03:22 AM

ADVERTISEMENT

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சா் ப.வெ.தாமோதரன் (76) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே உள்ள பச்சாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ப.வெ.தாமோதரன். இவா் கடந்த 2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பொங்கலூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா்.

அதிமுக கோவை புகா் மாவட்டச் செயலாளா், ஆவின் தலைவா் ஆகிய பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளாா். தற்போது, எம்.ஜி.ஆா். மன்றத்தின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தாா்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் கோவை, நீலாம்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த டிசம்பரில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இதனிடையே கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் வாா்டுக்கு மாற்றப்பட்டாா். இதற்கிடையில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இவருக்கு மனைவி விஜயம், மகள்கள் கவிதா, ராதிகா ஆகியோா் உள்ளனா். இவரது மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT