தமிழ்நாடு

தங்கம் சவரனுக்கு ரூ.432 குறைந்தது

9th Jan 2021 11:20 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயா்ந்து வந்தது. கடந்த திங்கள்கிழமை அன்று ரூ.38 ஆயிரத்தையும், கடந்த புதன்கிழமை அன்று ரூ.39 ஆயிரத்தையும் தாண்டிய நிலையில், கடந்த வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.640 வரை குறைந்தது.

இதன்தொடா்ச்சியாக, மூன்றாவது நாளாக சனிக்கிழமையான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து, ரூ.37,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.54 குறைந்து, ரூ.4,700 ஆக விற்கப்படுகிறது. 

ADVERTISEMENT

வெள்ளி கிராமுக்கு ரூ.4.10 குறைந்து, ரூ.69 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,100 குறைந்து ரூ.69,000 ஆகவும் உள்ளத. 

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,700

1 சவரன் தங்கம்...............................37,600

1 கிராம் வெள்ளி.............................69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,754

1 சவரன் தங்கம்...............................38,032

1 கிராம் வெள்ளி.............................73.10

1 கிலோ வெள்ளி.............................73,100

ADVERTISEMENT
ADVERTISEMENT