தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் பழனிசாமி: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

DIN

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே பழனிசாமியை ஏற்றுக்கொள்வதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டணியை இறுதி செய்ய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைத்து வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு இலவச தடுப்பூசி போடப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டணி, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் மாகாண கவுன்சில் முறையை ரத்து செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித முன்னுரிமை என்னும் நெறிமுறையை முறைப்படுத்திய தமிழக அரசுக்கு பொதுக்குழு கூட்டத்தில் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் அமைத்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

நகர்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்றிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்

நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கிய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு தழுவிய அளவில் சிறந்த நிர்வாகம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை முன்னேற்றிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2,500 கொடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீரிமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ் நாட்டில் ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்துவது என அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16   தீர்மானங்கள்    நிறைவேற்றப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT