தமிழ்நாடு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

9th Jan 2021 01:24 PM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு 10 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் குறிப்பாக தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

ADVERTISEMENT

10.01.21: ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

11.01.21: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

12.01.21: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

13.01.21: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையின் அளவு

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக சுரலாடுகோடு, புத்தன் அணை, கொடைக்கானல் போர்ட் கிளப் தலா 7 செ.மீ மழையும், பல்லியார் 6 செ.மீ மழையும், பேராவூரணி, கடலாடி, விளாத்திகுளம் தலா 5 செ.மீ மழையும், பேச்சிப்பாளை, குன்னூர், நன்னிலம், சித்தார், அதிராமபட்டணம், நன்னிலம், காரைக்கால், கமுதி தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது. 
 

Tags : rain IMD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT