தமிழ்நாடு

திண்டிவனம் அருகே ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது

7th Jan 2021 05:40 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணைகள் மற்றும் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன.

மீண்டும் கடந்த இரு தினங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள ரோசனை ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்ததால்  கரையில்  வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டு, ரோசனை ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

ADVERTISEMENT

இதில், சாலைகளில் மழை வெள்ள நீர் வழிந்தோடியதோடு, 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்றதால் தண்ணீர் வடிந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் சென்று பார்வையிட்டு, ஏரி உடைப்பு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT