தமிழ்நாடு

வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் 

7th Jan 2021 03:18 PM

ADVERTISEMENT

 

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியகுளம் நகரச் செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி கலந்துகொண்டு பேசினார்.

பெரியகுளம் தென்கரை வன்னியர் தெருவில் இருந்து ஊர்வலமாக கோஷமிட்டுக்கொண்டே பிச்சை எடுத்தபடி சென்றனர்.

ADVERTISEMENT

தங்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு கிடைக்காவிட்டால் இதுபோன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று கூறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பெரியகுளம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர்.
 

Tags : pmk
ADVERTISEMENT
ADVERTISEMENT