தமிழகத்திலுள்ள கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளஎ அறிக்கையில்,
பொங்கல் கருணைக் கொடை ரூ, 1,000 முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்பட முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.
2019-20 ஆம் ஆண்டில் 240 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ. 1,000-மும், 2019-20 ஆம் ஆண்டில் ஆறு மாதத்திற்கு மேல் 240 நாள்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் கருணைக் கொடை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT