தமிழ்நாடு

சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து ஒப்பாரி போராட்டம்

7th Jan 2021 02:35 PM

ADVERTISEMENT


திருமங்கலத்தில் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி வைக்கும் போராட்டம்  வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமங்கலம் முன்சிப் கோர்ட் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சூரியகலா  தலைமை வகித்தார். தாலுகா குழு செயலாளர் அம்சவல்லி, தாலுகா தலைவர் பாண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் எஸ்.கண்ணகி சிறப்புரையாற்றினார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாதர் சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT