தமிழ்நாடு

லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம்: கருப்புக்கொடி ஏந்தி போராட முடிவு

7th Jan 2021 03:21 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கூடலூரில் லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்த அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம்  மக்கள் மன்ற ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். கஜேந்திரன் வரவேற்றார்.  

கூட்டத்தில் போதகர் அன்பழகன், ஜமாத் கமிட்டி சார்பில் கே என் பி ராஜா, நகர் நல குழு சார்பில் பி. .ராமர், பொதுமக்கள் சார்பில் ஒப்பந்தக்காரர் தெய்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

ADVERTISEMENT

கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு-

லோயர் கேம்ப் - மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவும், அதற்கு மாற்றாக வைகை அணையைத் தூர்வாரி முழு கொள்ளளவு நீரைத் தேக்கி அங்கிருந்து ராட்சத குழாய் வழியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யக்கோரி  வரும் 25.1. 2021 ஆம் தேதி கூடலூரில் கருப்புக்கொடி ஏந்தி கவனயீர்ப்பு ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஊர்வலத்தில் கூடலூரில் இருக்கிற ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டு நபர்கள் அவசியம் கலந்துகொள்வது எனவும் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லோயர் கேம்ப் மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தினசரியும் ஒரு சமுதாய அமைப்பு சார்பில் உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டம் அறவழியில் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்து, வைகை அணையிலிருந்து மதுரைக்கு நீர் எடுத்துச் செல்வதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு மக்களிடம் தரும் வேட்பாளரை எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் ஏகமனதாக ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வரும் ஜனவரி 15.1.21 அன்று கர்னல் பென்னிகுக் பிறந்தநாள் விழாவிற்கு வருகை தரும் துணை முதல்வரிடம் மேற்படி திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கூறும் மனுவை அனைத்து சமூக அமைப்பு சார்பில் நேரில் அளிப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தைத் தடுப்பது குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வது எனவும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 45க்கும் மேற்பட்ட சமுதாய சமூக சேவை அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் ப.புதுராசா நன்றி கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT