தமிழ்நாடு

ஜன. 20 வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்: திமுக

7th Jan 2021 01:59 PM

ADVERTISEMENT

ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை தமிழகத்திலுள்ள கிராமங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் ஒருசில பகுதிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனால் மக்கள் கிராம சபைக் கூட்டங்களுக்கான கால அவகாசத்தை நீட்டித்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் வைத்த கோரிக்கையின்படி ஜனவரி 20-ஆம் தேதி வரை மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT