தமிழ்நாடு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை? 

7th Jan 2021 01:30 PM

ADVERTISEMENT

 

சென்னை: சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை என கேள்வி  எழுப்பிய உயர்நீதிமன்றம், சென்னை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் துரைராஜ் என்பவர்  ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் நடராஜன் ஆஜராகியிருந்தார். அப்போது நீதிபதி, சென்னை நகரில் என்ன நடக்கிறது? கொலை வழக்குகள் 15, 16 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன,  இத்தனை ஆண்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரணை கைதிகளாக உள்ளனர்.

ADVERTISEMENT

புதிய வழக்குகளில் கூட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடும் நிலையில், 15 ஆண்டுகள் வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தால், சாட்சி சொல்ல யார் வருவார்கள்? எப்படி தண்டனை பெற்று கொடுக்கப் போகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். 

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள கொலை வழக்குகள் எத்தனை? இதுதொடர்பாக வரும் ஜனவரி 25-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு  உத்தரவிட்டார்.

இந்த அறிக்கையை பார்த்த பின் காவல் ஆணையரை அழைத்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளை கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு எதிரான வழக்கை முடிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT