தமிழ்நாடு

திரையரங்குகளில் 100% அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

7th Jan 2021 01:51 PM

ADVERTISEMENT

திரையரங்குகளில் 100 சதவிகித அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், புதிய வகை கரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்களைப் பற்றி சிந்திக்காமல் அரசு எப்படி திரையரங்கை 100 சதவிகிதம் நிரப்ப அனுமதியளித்தது.

கரோனா தொற்று இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்றே மத்திய, மாநில அரசுகள் தினமும் வெளியிட்டு வரும் தகவல்கள் கூறுகின்றன. 
 
திரையரங்கை திறக்க மருத்துவர் குழுவினர் பரிந்துரைத்திருந்தால், அதன் விவரத்தை வெளியிட வேண்டும்.

மருத்துவ நிபுணர்களும், மத்திய உள்துறை செயலாளரும் எச்சரித்தும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெளனம் சாதித்து வருகிறது என்று கூறினார்.

ADVERTISEMENT

Tags : theater
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT