தமிழ்நாடு

தேர்தலைப் புறக்கணிப்போம்: வேளாளர் சங்கத்தினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு

6th Jan 2021 12:18 PM

ADVERTISEMENT

 

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் தேர்தலை புறக்கணிப்போம் என்று வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்ட வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் சார்பில் கம்பம், கடலூர் பகுதிகளில் வால் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில் தேர்தலை புறக்கணிப்போம், வேளாளர் என்பது எங்களது சாதிப்பெயர், 2 கோடி எங்கள் சமுதாய வாக்கு இனி யாருக்கும் இல்லை. எங்கள் வேளாளர் என்னும் ஜாதிப் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு தாரை வார்க்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகள் மௌனம் காக்கும் மற்ற அனைத்து கட்சிகளும் ஓட்டுப் பிச்சை கேட்டு எங்கள் சமுதாய மக்களை நாடி வராதே, என்று உள்ளது.

ADVERTISEMENT

இதுபற்றி கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் கே.வி.பி. முருகேசன் என்பவரிடம் கேட்டபோது, வேளாளர், வெள்ளாளர் என்ற எங்களது சமுதாய பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு அரசு அறிவித்து உள்ளது.  இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT