தமிழ்நாடு

அவலநிலையில் திருப்புவனை பாளையம் மயானம்: கவனம் செலுத்தப்படுமா?

4th Jan 2021 12:14 PM

ADVERTISEMENT

புதுச்சேரி: திருப்புவனை பாளையம் பகுதியில் உள்ள மயானம் ஆக்ரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவலநிலையில் உள்ளது.

புதுவை மாநிலத்திற்கு உள்பட்ட திருப்புவனை பாளையம் பகுதியின் மயானம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பயன்படுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

குப்பைமேடாக இருக்கும் திருப்புவனை பாளையம் மயானம்.

இந்த மயானத்துக்குச்  செல்வதற்கு போதிய சாலை வசதி கூட இல்லை. அப்படியே அங்கு உடல்களைக் கொண்டு சென்றாலும், ஆக்ரமிப்புகள் காரணமாக, இறந்தவர் உடலை அடக்கம் செய்ய தகுந்த இடவசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மயானத்துக்குள் இறுதிச் சடங்குகள் செய்யவும் தண்ணீர் வசதியில்லாததால், அங்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து அரசு அதிகாரிகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அங்குள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT