தமிழ்நாடு

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறப்பு? இன்று முதல் மீண்டும் கருத்துக் கேட்பு

4th Jan 2021 09:30 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து இன்று முதல் கருத்துக் கேட்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாா்ச் 23 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவா், மாணவிகளுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 
நிகழ் கல்வியாண்டுக்கு (2020-21) மாணவா் சோ்க்கையும் இணைய வழியில் நடைபெற்றது. இதற்கிடையே, கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தத் தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் அனுமதி அளித்தது. இருப்பினும், தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. 
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என இன்று முதல் கருத்துக்கேட்கப்பட உள்ளது. 
மாணவர்கள், பெற்றோர்களிடம் இந்த வாரம் இறுதிவரை கருத்துக்கேட்கப்படும். பள்ளிகள் திறந்தவுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும். பொங்கல்பண்டிகைக்கு ஆன்லைன் வகுப்பு விடுமுறை குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags : education minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT