தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்: அமைச்சருடன் பேச்சுவார்த்தை

4th Jan 2021 04:37 PM

ADVERTISEMENT

 

சென்னை: மாநில போக்குவரத்துக் கழக  தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக திங்களன்று வெளியாகியுள்ள தகவலில், ‘அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஜனவரி 5-ஆம் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், ஒரு தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி மட்டுமே அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT