தமிழ்நாடு

பொங்கல் பரிசு: சகோதரிகளுக்கு மூத்த சகோதரனாக முதல்வர் வழங்கும் வரிசை- ஓ.எஸ்.மணியன்

4th Jan 2021 02:33 PM

ADVERTISEMENT

 

பொங்கல் பரிசு தொகுப்பு என்பது தாய் வீட்டிலிருந்து சகோதரிகளுக்கு வழங்கப்படும் வரிசையைப் போல, மூத்த சகோதரனாக இருந்து முதல்வர் வழங்கும் தமிழர் பண்பாட்டின் அடையாளம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் செங்கரும்பு உள்ளிட்ட தொகுப்பு பொருள்கள் வழங்கும் பணியை தமிழக கைத்தரி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார்.

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார். கூட்டுறவுச் சங்கத் தலைவர் அவை.பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல, மருதூர் தெற்கு தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பினை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கமலா அன்பழகன் தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

Tags : பொங்கல் பரிசு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT