தமிழ்நாடு

'நர்மதா' ராமலிங்கம் காலமானார்

4th Jan 2021 08:08 PM

ADVERTISEMENT


நர்மதா பதிப்பகம், நியூ புக்லேண்ட்ஸ் நிறுவனரான 'நர்மதா'  டி.எஸ். ராமலிங்கம் (70) திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

மறைந்த ராமலிங்கத்தின் விருப்பப்படியே அவருடைய உடல் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி - மருத்துவமனையிடம் கொடையாக ஒப்படைக்கப்பட்டது.

தமிழில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தவர் ராமலிங்கம்; புதுமையான வடிவமைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டவர்.

எழுத்தாளர்கள் வண்ணநிலவன், பாலகுமாரன், பிரபஞ்சன் போன்றோரின் முதல் நூல்கள் இவரால்தான் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

மறைந்த ராமலிங்கத்துக்கு மனைவி மணிமேகலை, மகன் ஜனார்த்தனன், மகள் ரேணுகா ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு: +91 98406 68756

Tags : obit
ADVERTISEMENT
ADVERTISEMENT