தமிழ்நாடு

சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது: கமல் ஆவேசம்

4th Jan 2021 08:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது என்று மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்சுமை தாங்க இயலாமல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணசாமி தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது தற்கொலை தொடர்பாக தனது பேத்தி மித்ராவிடம் மன்னிப்புக் கேட்டு சுவற்றில் வாசகத்தினை எழுதி வைத்திருந்தார்.  

இந்நிலையில் சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது என்று மநீம தலைவர் கமல் ஆவேசம் பொங்கத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக திங்களன்று அவப்ர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது?

எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச்  சும்மா விடாது.’ என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT