தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: மருத்துவ மாணவர்களுக்குப் பாராட்டு விழா 

4th Jan 2021 02:44 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்ட யாதவ ஆலோசனை மையம் சார்பில், மருத்துவ மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. 

லெட்சுமாங்குடி கம்பர் தெரு மாரியம்மன் கோயிலில், கூத்தாநல்லூர் வட்ட யாதவ ஆலோசனை மைய தொடக்கம், நான்கு மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் கிழக்கு மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

முப்பெரும் விழாவிற்கு, யாதவ ஆலோசனை மைய மாவட்டத் தலைவர் ஆர்.கே.பாலகுணசேகரன் தலைமை வகித்தார். மாநில யாதவ மைய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பொறியாளர் நன்னிலம் ஜி.ஜெயராமன், மயிலாடுதுறை பி.பார்த்தீபன், மாநிலப் பொருளாளர் ஆர். காயாம்பூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் வட்ட மைய செயலாளர் பாலு வரவேற்றார். கூத்தாநல்லூர் வட்ட யாதவ ஆலோசனை மைய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது. தலைவர் ப.கண்ணன், துணைத் தலைவர்கள் பிரகாஷ், அய்யப்பன், செயலாளர் பாலு, இணைச் செயலாளர்கள் ஆர்.பாலகிருஷ்ணன், ராமு,பொருளாளர் இளங்கோ மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாகத் தலைமையாசிரியர் உதயகுமார், வைகுண்டம் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 

தொடர்ந்து, மருத்துவக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தின் தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். 

நிகழ்வில், திருவாரூர்  மாவட்ட நிர்வாகிகள் பூங்குன்றன், பாலகுமார், கண்ணன், செல்வக்குமார், கலியமூர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூத்தாநல்லூர் தலைவர் ப.கண்ணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT