சென்னை: பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விளங்குகின்றன. அதிலும் அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவையாகும்.
இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜனவரி 14 அன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15 அன்று பாலமேட்டிலும் மற்றும் ஜனவரி 16 அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகளில் 300 வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.