திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் லேசான காய்ச்சல் காரணமாக ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் கே.எச்.அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காட்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் துரைமுருகன்.
இதையும் படிக்கலாமே.. திருச்சி தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதி
ADVERTISEMENT
இந்த நிலையில் அவருக்கு திடீரென லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக மேல்விஷாரம் கே.எச். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.