தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கம்

4th Jan 2021 12:16 PM

ADVERTISEMENT

 

சென்னையில் இன்று முதல் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்டது. தற்போது படிப்படியாக சேவை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், வார நாள்களில்(திங்கள் முதல் சனி வரை) மேலும் கூடுதலாக 160 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.  

தற்போது நாள் ஒன்றுக்கு 500 சர்வீஸ் என்ற முறையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

ADVERTISEMENT

மேலும், சென்னை புறநகருக்கான மின்சார ரயில் சேவை இன்று முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை புறநகர் ரயில் சேவை ஓரளவுக்கு முழுமையாக கரோனாவுக்கு முந்தைய சேவையை எட்டியுள்ளது. 

Tags : chennai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT