மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ஆம் தேதி மீண்டும் சென்னை வருகிறார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் சென்னை வருகிறார். அமித்ஷா சென்னை வருகையின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம், நடிகர் ரஜினியையும் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.