தமிழ்நாடு

மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு சவரன் தங்கம்

4th Jan 2021 11:35 AM

ADVERTISEMENT

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் 38 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திங்கள்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.352 உயா்ந்து, ரூ.38,336-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.44 உயா்ந்து, ரூ.4,792 ஆக உள்ளது. 

ADVERTISEMENT

அதேநேரத்தில்,வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்துள்ளது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,700 உயர்ந்து ரூ.73,700 ஆகவும் விற்பனையாகிறது. 

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,792

1 சவரன் தங்கம்...............................38,336

1 கிராம் வெள்ளி.............................73.70

1 கிலோ வெள்ளி.............................73,700

சனிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,748

1 சவரன் தங்கம்...............................37,984

1 கிராம் வெள்ளி.............................72.00

1 கிலோ வெள்ளி.............................72,000
 

ADVERTISEMENT
ADVERTISEMENT