தமிழ்நாடு

தமிழகத்தில் 8,127 பேர் கரோனா சிகிச்சையில் - முழு விவரம்

4th Jan 2021 12:30 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 8,127 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 0.99 சதவீதமாகும்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இதுவரை தமிழகத்தில் கரோனா பாதிப்பு 8,20,712 ஆக உள்ளது. இவர்களில் 8,127 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே.. பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: விமான நிலையத்துக்கு புதிய ரயில் சேவை

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி நேற்று மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,156-ஆக உயா்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 236 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,127 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தொடக்கம் முதல் இன்று வரை அதிகபட்சமாக சென்னையில்தான் அதிக கரோனா பாதிப்பு பதிவானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 2,406 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கடுத்த இடங்களில் கோவை (753), செங்கல்பட்டு (528), சேலம் (321), ஈரோடு (309) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 13 - 60 வயதுக்கு உள்பட்டவர்கள் 6,82,980 பேர் ஆவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT