தமிழ்நாடு

போடியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம்: ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

DIN

போடி:  வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த தினம் தேனி மாவட்டம் போடியில் கொண்டாடப்பட்டது.

அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீர்செல்வம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கட்டபொம்மன் சிலைக்கு நாயுடு, நாயக்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல்  போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும், திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் போடிக்கு வந்து கட்டபொம்மன் பிறந்த தினத்தில் கலந்து கொண்டனர்.

போடி  கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், நாயுடு, நாயக்கர் பேரவையினர் உள்ளிட்ட அமைப்பினர் ஊர்வலமாக கட்டபொம்மன் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பாரம்பரிய கலைகளான உருமி மேளம், தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  

போடி ஜக்கமநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், கரட்டுப்பட்டி, சூலப்புரம் பகுதியை சேர்ந்தவர்களும் தேவாரட்டம் ஆடிக்கொண்டு ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  இதேபோல்  பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT