தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் சேதமாகும் சாலைகள்

3rd Jan 2021 01:29 PM

ADVERTISEMENT


உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகளால் சாலைகள் சேதமாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் வசிக்கும் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக லேயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் முல்லைப்பெரியற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

 இதற்காக 18 வார்டுகளில் குழாய் அமைத்து அதன் மூலமாக பொதுமக்களுக்கு 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால், பல  வார்டுகளில் பூமிக்கு கீழே செல்லும் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. அதன்படி, 5 ஆவது வார்டு பி.டி.ஆர் காலனி, தென்னகர் காலனியில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமாகி வருகிறது.

 சமீபத்தில் சுமார் 3 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலைகள் ஒரு சில மாதங்களிலே சேதமாகி வருவதால் பேரூராட்சியில் குடிநீர் குழாய் உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

ADVERTISEMENT

Tags : Roads damaged drinking water pipe break
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT