மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார்.
பாண்டிகோவில் உள்ள துவாரகா பேலசில் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவுள்ளார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் புதிய கட்சி தொடக்கம், பிற கட்சிகளுக்கு ஆதரவு உள்ளிட்டவை பற்றியும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் மேடையில் ஆதரவாளர்கள் திரண்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ADVERTISEMENT
மேடையில் கூட்டம் சரிசெய்யப்பட்ட பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசி வருகிறார்.
மு.க.அழகிரி இல்லத்திற்கு ஆதரவாளர்கள் வரவேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.