தமிழ்நாடு

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு தொடங்கியது

3rd Jan 2021 11:37 AM

ADVERTISEMENT

 

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி வருகின்றனர்.  

குரூப் 1 தொகுதிக்குள் வரும் துணை ஆட்சியா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் உள்ளிட்ட பதவியிடங்களில், 18 துணை ஆட்சியா், 19 துணை கண்காணிப்பாளா், 10 வணிகவரிகள் உதவி ஆணையாளா், 14 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், 4 ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், 1 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் மாவட்ட அலுவலா் 1 என மொத்தம் 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஆண்டு ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வினை எழுத 2 லட்சத்து 57,237 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் 856 தோ்வுக் கூடங்களில் 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதி வருவதாகவும், சென்னையில் மட்டும் 150 இடங்களில் தோ்வுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT