தமிழ்நாடு

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி குரூப்-1 தேர்வு: கோவையில் சுமார் 11,887 பேர் பங்கேற்பு

3rd Jan 2021 11:45 AM

ADVERTISEMENT

 

கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள் கோவை மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் உள்ள 40 அறைகளில் நடைபெற்று வருகிறது. 

கோவையில் குரூப் 1 தேர்வுக்கு 11 ஆயிரத்து 887 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையங்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வை கண்காணிக்க 9 நடமாடும் அலுவலர்கள், 40 தேர்வு கூட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 5 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

முறைகேடுகள் நடக்காமல் இருக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி நிலையில் மாவட்ட அளவிலான ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக தேர்வுக்கூடங்களில் போதுமான பாதுகாப்பு மற்றும் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT