தமிழ்நாடு

குரூப் -1 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,360 பேர் பங்கேற்பு

3rd Jan 2021 12:26 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை ஞாயிற்றுக்கிழமை 4360 பேர் எழுதினர். 3381 பேர் பங்கேற்கவில்லை.

துணை ஆட்சியர்,காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1  பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. 

நாமக்கல் மாவட்டத்தில் 25 மையங்களில் இத்தேர்வை எழுத 7741 பேர் விண்ணப்பித்திருந்தர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்வை 4360 பேர் எழுதினர். 3381 பேர் பங்கேற்கவில்லை. 

ADVERTISEMENT

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் பாலுசாமி, மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தெருவை ஒட்டி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

Tags : Group-1 Exam TNPSC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT