தமிழ்நாடு

முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி: விஜயபாஸ்கர்

3rd Jan 2021 03:36 PM

ADVERTISEMENT


தமிழகத்தில் முதலாவதாக முன்களப் பணியாளர்களுக்கும், பின்னர்  பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது,''முதற்கட்டமாக 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது.

தமிழகத்தில் முதல்கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT