தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

3rd Jan 2021 05:17 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருக்கும் நிலையில், ஜனவரி தொடங்கியும் வடகிழக்கு பருவமழை முடியவில்லை. இதனால் காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி  கடலோரப்  பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT