தமிழ்நாடு

கெங்கவல்லியில் 20 வருடம் பின்பு நடந்த முன்னாள் மாணவ ஆசிரியர்கள் சந்திப்பு

3rd Jan 2021 09:33 AM

ADVERTISEMENT

 

தம்மம்பட்டி: கெங்கவல்லி  அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சனிக்கிழமை 1998-2000 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா  20 வருடங்களுக்கு  பிறகு சனிக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவிற்கு தற்போதைய முதல்வர் சித்திரபுத்திரன் தலைமை வகித்தார். பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வர்கள் ஈஸ்வரன், முத்துசாமி, ராதாருக்குமணி, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாயக்கிருஷ்ணன் பங்கேற்றார். விழாவினை முன்னாள் மாணவர்  கண்ணன் மற்றும் சுந்தரேசன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஜேசுராஜ்  நன்றி கூறினார். 

விழாவில் 20 வருடங்களுக்கு பிறகு அப்போதைய பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சிவாஜி, மனோகரன், பஷீர் மற்றும் மாணவ ஆசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்று தங்கள் ஆசிரியர் பயிற்சி கால நினைவுகளையும், தற்போது அரசு பள்ளிகளில் பணிபுரியும்  சூழலையும் பகிர்ந்து, மனம் விட்டு பேசி நட்பை புதுப்பித்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Gangavalli Teachers Meeting
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT