தமிழ்நாடு

மாதவரத்தில் அதிமுக சார்பில் மருத்துவ முகாம்

3rd Jan 2021 01:14 PM

ADVERTISEMENT


மாதவரம்:  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட  தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மருத்துவ முகாம் மாதவரம் கிழக்கு பகுதி  செயலாளர் கண்ணதாசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

மாதவரம் மேற்கு பகுதி செயலாளர் வேலாயுதம் வழக்குரைஞர் பிரிவு  இணைச் செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சங்கர் மாதவரம் மேற்கு பகுதி  தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாதவரம் பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண், காது, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT