தமிழ்நாடு

தீர்த்தவாரி கண்டருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்! 

3rd Jan 2021 12:50 PM

ADVERTISEMENT

 

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழாவின் இராப்பத்து 10 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை காலை நம்பெருமாள் தீா்த்தவாரி கண்டருளினார்.

விழாவையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு பரமபதவாசலை 10.30- க்கு கடந்தார். பின்னா் 11 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் தீா்த்தவாரி கண்டருளி, 12 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளினார். 

ADVERTISEMENT

8 மணி முதல் 10 மணி வரை அரையா் சேவையும் திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெற்றது. 

பொதுஜனச் சேவை காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இரவு 8 மணிக்குமேல் மூலஸ்தான சேவை கிடையாது. 

திங்கள்கிழமை நம்மாழ்வாா் மோட்சமும், இயற்பா சாற்று முறையும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையா் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்தனா்.           
 

ADVERTISEMENT
ADVERTISEMENT