தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது

2nd Jan 2021 09:40 AM

ADVERTISEMENT

 
தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை முதலாவதாக தொடங்கியது. 

கரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் ஒத்திகை நடக்கிறது. 

தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது.  காலை 9 மணி முதல் காலை 11மணி வரை தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது. 

ADVERTISEMENT

ஊசி எதுவும் போடாமல் கோவின் செயலி மூலம் சுகாதார பணியாளர்கள் ஒத்திகையில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உள்பட 3 இடங்களிலும், நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை உள்பட 3 இடங்களிலும், நெல்லையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், பூந்தமல்லியில், அரசு மருத்துவமனை, நேமம் பொது சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. 

கரோனா செயலி சரியாக செயல்படுகிறதா, தடுப்பூசி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே அசாம், ஆந்திரம், பஞ்சாப், குஜராத்தில் ஒத்திகை நடத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் குறைந்த வெப்பநிலையில் தடுப்பூசியை சேமித்து வைக்கும் வசதியும், 51 இடங்களில் 2.5 கோடி தடுப்பூசிகள் சேமித்து வைப்பதற்கான வசதிகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags : Vaccine rehearsal Vaccine rehearsal started
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT