தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யத்தின் முதல் தொழிற்சங்கம் பதிவு

2nd Jan 2021 01:13 PM

ADVERTISEMENT


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர் முயற்சியில் ரயில்வே துறையின் ஐசிஎஃப் தொழிற்சாலையில் மய்யம் ஐசிஎஃப் தொழிற்சங்கம் எனும் பெயரில் தமிழகத்தில் முதல் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழோடு கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று தொழிலாளர் நல அணி மாநில செயலாளர் சு.ஆ. பொன்னுசாமி தலைமையில் அத்தொழிற்சங்கத்தின் தலைவர் ஜிம். கே. மாடசாமி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் ஆர். மகேந்திரன், தொழிலாளர் நல அணி மாநில துணைச் செயலாளர் (சென்னை மண்டலம் டி. சேகர், நற்பணி இயக்க மாநில செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஊடக பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ், சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளர் பிரியதர்சினி உதயபானு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

Tags : kamal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT