தமிழ்நாடு

தமிழக காங்கிரஸ் கட்சிக்கு நிர்வாகிகள் நியமனம்: வசந்தகுமாரின் மகன் பொதுச் செயலாளர் 

2nd Jan 2021 02:58 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நியமித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.வி. வேணுகோபால் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நியமன அறிவிப்பில், 

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே.. தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்: கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

ADVERTISEMENT

யு. பலராமன், ஏ. கோபண்ணா உள்பட 32 பேர் துணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருடன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு மகன் கார்த்தி தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா ஆகியோருக்கும், மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு மகன் அருள் அன்பரசு உள்ளிட்டோருக்கும் கட்சியில் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே.. 57 பொதுச் செயலர்கள், 104 செயலர்கள்! தமிழ்நாடு காங்கிரஸில் தடாலடி

தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில், கே.எஸ். அழகிரி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன் என 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் கொள்கை மற்றும் பிரசாரக் குழுவின் தலைவராக சு. திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில், யு. பலராமன், டாக்டர் எஸ். விஜயதரணி, பொன் கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கட்சியின் செயற்குழுவின் தலைவராக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். அந்தக் குழுவில் ப. சிதம்பரம், மாணிக்கம் தாகூர், கே.வி. தங்கபாலு உள்பட 56 பேர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags : congress tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT