தமிழ்நாடு

திருப்பூரில் கேளிக்கை விடுதி முற்றுகை

2nd Jan 2021 02:47 PM

ADVERTISEMENT

 

திருப்பூர் கல்லூரி சாலையில் புதியதாகத் திறக்கப்பட்ட தனியார் கேளிக்கை விடுதியை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் கல்லூரி சாலையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று கடந்த 2 நாள்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அதிக அளவில் கோயில்கள், மசூதிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளது. ஆகவே, போக்குவரத்து அதிகம் உள்ள இந்தப் பகுதியில் கேளிக்கை விடுதியால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனக்கூறி விடுதி முன்பாக அப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என 50க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 

ADVERTISEMENT

மேலும், கேளிக்கை விடுதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் வடக்கு காவல் துறையினர் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக எழுதித் தீர்வுகாணும்படி வலியுறுத்தியதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT