தமிழ்நாடு

லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி குறைவு 

2nd Jan 2021 06:01 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார நிலையத்தில் மின்சார உற்பத்தி, சனிக்கிழமை 70 மெகாவாட்டாக  குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வியாழக்கிழமை அணையிலிருந்து விநாடிக்கு 822 கன அடியாக வெளியேறிய நீர், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், விநாடிக்கு, 778 கன அடியாக வெளியேற்றப்பட்டது. 

இதன் மூலம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில், முதல் மின்னாக்கியில் 41 மெகாவாட் மின்சாரமும், மூன்றாவது மின்னாக்கியில் 29 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

கடந்த டிச.26ல் மூன்று மின்னாக்கிகளில் 85 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120.30 அடியாகவும், நீர் இருப்பு 2687 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 789 கன அடியாகவும், நீர் வெளியேற்றம், 778 கன அடியாகவும் இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT