தமிழ்நாடு

நிலக்கோட்டையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை

2nd Jan 2021 03:01 PM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மலர் சாகுபடி செய்யப்படும் நிலக்கோட்டை பகுதியில், இந்த பனிப் பொழிவின் காரணமாக மல்லிகை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனால்  நாளொன்றுக்கு  50 டன் மல்லிகைப் பூ வந்த இடத்தில், தற்போது 50 கிலோ பூக்களை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை சந்தையில் சனிக்கிழமை நிலவரப்பட்டி, காய் மல்லிகைப் பூ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், 2ஆம் ரகம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் ரகம் ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த 3 ஆண்டுகளில் மல்லிகைப் பூவுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச விலையாக இந்த தொகை பதிவாகியுள்ளது. 

பனிப்பொழிவு அதிகரிக்கும்பட்சத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை  பூ விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்லிகை பூ மட்டுமின்றி, முல்லை, ஜாதிப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.1100க்கும், ஜாதி பூ கிலோ ரூ.800க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.நோய் தாக்குதலாலும் செடிகள் பாதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

நிலக்கோட்டை பகுதிகளில் பனிப்பொழிவு மட்டுமின்றி, சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் மல்லிகைப் பூ செடிகளில், மொட்டு கருகள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகை செடிகளைப் பாதுகாக்கப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT