தமிழ்நாடு

3 பெண்கள் தாக்கப்பட்டது வருத்தமளிக்கிறது: அமைச்சர் வேலுமணி

2nd Jan 2021 09:48 PM

ADVERTISEMENT

கேள்வி கேட்டதற்காக 3 பெண்கள் உள்பட 5 பேர் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். 
கோவை தொண்டாமுத்தூர் தேவராயபுரம் ஊராட்சியில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு  மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்திலிருந்த பெண் ஒருவர் ஸ்டாலினுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அந்த பெண்ணுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருவரையும் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற பெண், கோவை சுகுணா புரம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பூங்கொடி( 40) எனத் தெரிய வந்தது. 
இந்த நிலையில் ஸ்டாலின் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பெண்ணை சந்தித்த பின் அமைச்சர் வேலுமணி கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கேள்வி கேட்டதற்காக 3 பெண்கள் உள்பட 5 பேர் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது. கேள்வி கேட்டதற்காக கடுமையாக தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. அமைச்சர்களை கேள்வி கேளுங்கள், பதில் சொல்கிறோம். 
ஆனால் அப்பாபி மக்களை அடிக்காதீர்கள். அரசியல் ரீதியா கேள்வி கேட்டால் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். அராஜக முறை வேண்டாம் என்றார்.

Tags : Minister Velumani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT